மறைந்த நா.முத்துக்குமார் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

201608141642389171_Actor-vijay-homage-to-namuthukumar-death_SECVPFதிரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர்கள் நாசர், பொன்வண்ணன், விவேக், மனோஜ் கே.பாரதி, சசிகுமார், ஜெயம் ரவி, மனோபாலா, சந்தானம், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் வெற்றிமாறன், எஸ்.பி.ஜனநாதன், ராஜு முருகன், சேரன், ராம், தரணி, சீமான், வெங்கட் பிரபு, கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் பா.விஜய், மதன் கார்க்கி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய்யும் மறைந்த நா.முத்துக்குமாரின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து தனது அஞ்சலியை செலுத்தினார். நா.முத்துக்குமார் பாடல் எழுத அறிமுகமானது ‘வீரநடை’ படம் என்றாலும், விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படத்தில்தான் முதல் பாடல் வெளிவந்தது.

அதைத்தொடர்ந்து விஜய் நடித்த, ‘திருமலை’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘போக்கிரி’, ‘சுறா’, ‘நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘தெறி’ ஆகிய படங்களுக்கும் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries