உடற்பயிற்சிக்கு தயாரானார் கமல்

201608141607273258_Kamal-ready-to-gym-training_SECVPFகமல் கடந்த மாதம் அவரது அலுவலகப் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவரது காலில் பலத்த அடிப்பட்டது. அதன்பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வார காலங்கள் சிகிச்சை பெற்றார்.

அதன்பின்னர், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவே கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். எழுந்து நடக்க ஆரம்பித்துள்ள கமல், தற்போது தனது வழக்கமான உடற்பயிற்சியையும் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல் தற்போது பிரிக்கப்பட்டு விட்டது. கடந்த இரண்டு நாட்களாக உடற்பயிற்சி கூடத்துக்கு கால்களை தாங்கியபடியே நடந்து சென்று வருகிறேன்.

பிசியோதெரபி பயிற்சிகளையும் முறையாக செய்து வருகிறேன். நான் விரைவில் நலம் பெறவேண்டி என்னோடு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

கமல் பூரண குணமடைந்தபிறகு அவர் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெறவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries