மறைந்த நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது

201608141423599404_NaMuthukumar-final-procession-today-evening_SECVPFபிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலை திடீரென மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நா.முத்துக்குமார் மரணமடைந்த செய்தி அறிந்ததும் திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர்களில் இயக்குனர்கள் வெற்றிமாறன், சேரன், எஸ்.பி.ஜனநாதன், ராஜு முருகன், சீமான் கவிஞர் சினேகன், நடிகர்கள் விவேக், உதயநிதி ஸ்டாலின். பத்திரிகையாசிரியர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மறைந்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. நா.முத்துக்குமாரின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries