நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா

201608151215514819_Independence-day-celebration-in-Actors-Union_SECVPFஇந்திய திருநாட்டின் 70-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திலும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஆகஸ்ட் 15-ந் தேதி பிறந்த உறுப்பினர்கள் மணிவண்ணன், மோகன்தாஸ், கனகராஜ் ஆகியோருக்கு பிறந்தநாள் தின கேக் வெட்டிக் கொண்டப்பட்டது.

பின்னர், நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் உதயா, அஜய் ரத்தினம், எம்.ஏ.பிரகாஷ், அயூப்கான் மற்றும் அலுவலக ஊழியர்கள், ஏ.ஆர்.ஓ.க்கள் மற்றும் சங்க உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online