ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு டீஸர் : சிம்பு படக்குழு புதிய திட்டம்

201608161520078495_Simbu-movie-team-plan-multiple-teaser-for-simbu-getup_SECVPFசிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு 3 கெட்டப்புகளில் நடிக்கிறார். இதில், மதுர மைக்கேல் என்ற கெட்டப்பில் சிம்பு நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

சிம்பு மதுர மைக்கேல் கெட்டப்பில் இருந்த போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த கெட்டப்பில் உள்ள படப்பிடிப்பு முடிவடைந்ததும், போஸ்டரை போன்று தனியாக ஒரு டீஸர் ஒன்றை தயாரித்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.

அதேபோல், சிம்பு அடுத்ததாக நடிக்கவிருக்கும் கெட்டப்புகளின் படப்பிடிப்பு முடிய, முடிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக டீஸர்களை உருவாக்கி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தபிறகு டிரைலரை வெளியிடவுள்ளார்களாம்.

தற்போது மைக்கேல் மதுர கெட்டப்பில் உள்ள சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். அடுத்த 2 கெட்டப்புகளுக்கான ஜோடி தேடுதல் படலம் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

20 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் சென்னையில் டி.ஆர். பாடிய ஒரு பாடலுக்கு சிம்புவும் ஸ்ரேயாவும் இணைந்து நடனம் ஆடவிருக்கிறார்களாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online