ஜனவரியில் இணையும் ரஜினிமுருகன் கூட்டணி

201608161335596991_Rajinimurugan-team-again-joint-january_SECVPFஇயக்குனர் பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த கூட்டணி மீண்டும் இணையவிருப்பது ஏற்கெனவே வெளியான செய்திதான்.

தற்போது இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்கப்போவதாக சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’ படத்தை தயாரித்து வரும் ‘24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இப்படம் மட்டுமில்லாது, சிவகார்த்திகேயன் – மோகன்ராஜா இணையவிருக்கும் படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்-பொன்ராம் இணையவிருக்கும் படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கின்றனர். அதற்கு முன்னதாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries