தர்மதுரை படம் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ்

201608161057501005_PMK-leader-watch-Dharmadurai-Premiere-Show_SECVPFவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படம் வருகிற ஆக 19-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருக்காக படக்குழுவினர் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த பின்னர், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஸ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை கண்டிப்பாக இப்படம் பூர்த்தி செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries