கஷ்மோரா பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

201608161017312484_Kashmora-first-look-poster-release-date-announced_SECVPFகார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘கஷ்மோரா’. இப்படத்தை ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

கார்த்தி படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் செலவில் உருவாகிவரும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். கார்த்தியும் இப்படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதியை தற்போது அறிவித்துள்ளனர். அதாவது, வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries