விஷால் படத்தில் மனநல மருத்துவராக நடிக்கும் வடிவேலு

201608161233454149_Vadivelu-psychiatrist-in-Vishal-movie_SECVPF (1)விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘கத்தி சண்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். மேலும், இன்னொரு காமெடியனான சூரியும் இப்படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் வடிவேலு மருத்துவராக நடிப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தது. தற்போது, இப்படத்தில் மனநல மருத்துவராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் டாக்டர் பூத்ரி என்றும் வெளியாகியுள்ளது. அவரது வழக்கமான காமெடியாக இல்லாமல் இப்படத்தின் மூலம் பல நல்ல சமூக கருத்துகளையும் சொல்லியிருக்கிறாராம்.

முதல் பாதியில் வடிவேலுவும், இரண்டாம் பாதியில் சூரியும் காமெடியில் கலக்கியிருக்கிறார்களாம். இது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகுமார் தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online