கவுதமியுடன் சுருதிஹாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி

201608171201518800_rumored-to-have-difference-opinion-of-gouthami-and-shruti_SECVPFநடிகை சுருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அவருடைய மகள் சுருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்திலும், கவுதமி ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் என்று சுருதிஹாசன் சொல்லி இருக்கிறார்.

தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் தனக்கென்று ஒரு தனி டிசைன் என்று தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையேதான் விரும்புகிறார். தனது ஆடை அலங்காரம் பற்றி இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் அவர் கலந்து பேசுவது வழக்கம்.

‘சபாஷ் நாயுடு’ படத்தில் நாகரிக பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் அவர் நடிக்கிறார். அதை கருத்தில் கொண்டு அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார், கவுதமி.

அந்த ஆடைக்கு சில யோசனைகளை சுருதிஹாசன் கூற-அதற்கு தகுந்தபடி கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கவுதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார்.

இந்த ஆடையை சுருதியுடன் இணைந்து அவர் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும், சுருதி-கவுதமி இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. சுருதியும், அவரது தந்தையும் அழகான உறவை தங்களுக்குள் பகிர்ந்து வருகிறார்கள்.

தங்களுடைய அழகான சிறிய குடும்பத்துக்குள் கவுதமியை அன்போடு வரவேற்று இருக்கிறார், சுருதி. சுருதியின் பிறந்த நாளிலும் கவுதமி பங்கேற்று தனது அன்பை வெளிப்படுத்தினார்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online