மரக்கன்று நட்டு படப்பிடிப்பில் கலந்துகொண்ட விவேக்

201608171433214906_Vivek-planted-sapling-in-Brindavanam-Shooting-spot_SECVPF‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன், அருள்நிதியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘பிருந்தாவனம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக தான்யா நடிக்கவிருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாவார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார். படத்திலும் அவர் நடிகர் விவேக்காகவே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கர்நாடகாவில் உள்ள சக்லேஷ்ப்பூரில் இனிதே துவங்கியது. படப்பிடிப்பு துவங்கும் முன், விவேக் தனது இருபத்தியேழு லட்சத்து முப்பத்தெட்டாயிரத்து ஒன்றாவது மரக்கன்றை (27,38,001) அங்கு நட்டார்

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இப்படத்தை வான்சன் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries