வியக்கவைக்கும் காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக்

201608181244551195_Kaashmora-firstlook-poster-released_SECVPFகார்த்தி-நயன்தாரா-ஸ்ரீதிவ்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘காஷ்மோரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இப்படத்தின் புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகாததால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படியிருக்கும் என்பது அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பூர்த்தி செய்துள்ளது எனலாம்.

அந்த போஸ்டரில் போர் வீரருக்குண்டான உடையுடன், மொட்டைத் தலை, முகம் முழுக்க தாடி, மீசை என, இது கார்த்திதானா? என்று வியக்கும் அளவுக்கு அவரது தோற்றம் உள்ளது. பின்னணியில் போர் காட்சிகள் இருப்பதை பார்க்கும் போது இப்படத்தில் கண்டிப்பாக பிரம்மாண்டம் இருக்கும் என்று தோன்ற வைக்கிறது. ஒருபக்கம் கார்த்தியின் இந்த தோற்றம் ‘பாகுபலி’யில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவதையும் மறுக்க முடியாது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு பிறகு கோகுல் இயக்கி வரும் இப்படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இதுதான். இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகளுக்காக மிகவும் சிரத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுவதாக கூறுகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் பிரமிக்க வைத்ததுபோல் படமும் அனைவரையும் பிரமிக்க வைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries