செப்டம்பரில் அதிரடி காட்டவரும் ஜி.வி.பிரகாஷின் ‘புருஸ்லீ’

201608181222088970_GVPrakash-Bruce-Lee-movie-release-on-September_SECVPFஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘புருஸ்லீ’. இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே கமிட்டாயிருந்தார் ஜி.வி.பிரகாஷ். அதன்பிறகு, அவர் நடிப்பில் வெளிவந்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைவே, பல படங்கள் அவரை தேடிவர ஆரம்பித்தன.

இதனால், ‘புருஸ்லீ’ படம் திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது ‘புருஸ்லீ’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார்.

ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷ்- கீர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளையெல்லாம் படமாக்கிவிட்ட படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகளையும் முடித்துவிட்டு படத்தை ரிலீசுக்கு தயார்படுத்தியுள்ளனர்.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டபடியால் அடுத்தபடியாக இப்படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் விரைவில் வெளியிடவுள்ளனர். வருகிற செப்டம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online