தீபாவளி ரேசில் கார்த்தி, விஷாலுடன் இணைந்த தனுஷ்

201608191743570154_Dhanush-joint-with-diwali-race-with-karthi-vishal_SECVPFபண்டிகை தினத்தில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அதிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு அந்த தீபாவளி பெரிய கொண்டாட்டம்தான்.

அந்த வரிசையில் வரும் தீபாவளியிலும் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள மிகப்பெரிய நட்சத்திரங்கள் படங்கள் வெளிவர காத்திருக்கிறது. அந்த வரிசையில் ஏற்கெனவே, விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கி வரும் ‘கத்திச்சண்டை’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமலேயே தீபாவளிக்கு வெளிவரும் என தைரியமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்திற்கு திரும்பியுள்ளார் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ படமும் தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

வரலாற்று பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் ‘பாகுபலி’ படத்திற்கு இணையாக உருவாகியிருப்பதாக கூறப்பட்டாலும், படத்தில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகமாக்கியுள்ளது.

இவர்களுடன் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொடி’ படமும் இணைந்துள்ளது. ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் ‘கொடி’.

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக செய்தி. அரசியல்வாதி வேடத்திலும் நடித்திருக்கிறார். தொடர் வெற்றிகளை குவித்துவரும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கிற படம் என்பதால் ‘கொடி’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீபாவளிக்கு கார்த்தி, விஷால், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவது ரசிகர்களுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. ரசிகர்கள் இந்த படங்களின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பையெல்லாம் அந்த படங்கள் பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries