இந்தியாவின் சில்வஸ்டர் ஸ்டாலோன் ஆனார் அஜித்

201608191358462778_Hollywood-calls-ajith-indian-sylvester-stallone_SECVPFபொதுவாக அஜித்துக்கு பட்டம், பதவி, அடைமொழி என்பதில் எல்லாம் ஆர்வம் கிடையாது. இதற்காக தனக்கென்று இருந்து ரசிகர் மன்றங்களையெல்லாம் கலைத்தவர் அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இருப்பினும், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்று தமிழ் திரையுலகம் அவருக்கு ஒரு பட்டத்தை கொடுத்தது. இதைத்தவிர்த்து தற்போது அஜித் ரசிகர்கள் அவரை ‘தல’ என்று அடைமொழி வைத்துதான் அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், புதியதாக அஜித்துக்கு புதிய பட்டம் ஒன்று தானாக தேடி வந்திருக்கிறது. அதுவும், இந்தியாவில் அல்ல, ஹாலிவுட்டில் இருந்து வந்திருப்பதுதான் ஆச்சர்யமான ஒன்று. ஆஸ்திரியா நாட்டின் புகழ்பெற்ற ஊடகம் ஒன்று அஜித்துக்கு ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்துள்ளது.

ஹாலிவுட்டில் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனுக்கு இருக்கும் பெயர், புகழ், மதிப்பு, மரியாதைக்கு இணையாக இந்தியாவில் அஜித்துக்கும் அதே அளவு புகழ் இருப்பதை அறிந்து இந்த படத்தை அவருக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online