ரெமோ படத்துக்காக 4 நிமிடம் ஓடும் மியூசிக் வீடியோ: யூ டியூப்பில் வெளியிடப்பட்டது

201608190958312108_Remo-film-4-minute-music-video-released-on-YouTube_SECVPFசிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து இருக்கும் புதிய படம், ‘ரெமோ’. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் சதீஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல்-நகைச்சுவை கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்துக்காக, 4 நிமிடங்கள் ஓடும் ‘மியூசிக் வீடியோ’ படம் யூ டியூப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் பின்னணி பாடகர்-பாடகிகள் இடம் பெற்றுள்ளனர்.

அக்டோபர் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக பட அதிபர் ஆர்.டி.ராஜா தெரிவித்தார். அக்டோபர் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை வெளியிட அக்டோபர் 7-ந்தேதியை தேர்வு செய்திருப்பதாக அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries