புதிய படத்தில் நடிக்க அக்‌ஷய்குமாருக்கு ரூ.100 கோடி சம்பளம்

201608200906546302_New-film-act-Akshay-Kumar-salary-paid-Rs-100-crore_SECVPFஇந்தி நடிகர்கள் ஒரு படத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடித்து முடித்து விடுகின்றனர். இதற்காக அவர்கள் தங்கள் படங்களின் வியாபாரத்தை கணக்கில் எடுத்து சம்பளத்தை நிர்ணயித்துக்கொள்கின்றனர். சல்மான்கான் ஒரு படத்துக்கு ரூ.60 கோடி வாங்குகிறார்.

லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கிக்கொள்கிறார். அக்‌ஷய்குமார் ரூ.50 கோடியும், அமீர்கான் ரூ.45 கோடியும், ஹிருத்திக் ரோஷன் ரூ.30 கோடியும் வாங்குகின்றனர்.

இந்த நிலையில் அக்‌ஷய்குமார் தனது சம்பள முறையை திடீர் என்று மாற்றி இருக்கிறார். ஒரு படத்துக்கு குறிப்பிட்ட தொகை என்று வாங்குவதற்கு பதிலாக ஒரு நாள் நடிக்க ரூ.1 கோடி என்று சம்பளத்தை நிர்ணயித்து உள்ளார்.

காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தன்னை வைத்து எவ்வளவு காட்சிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு நாளைக்கு ரூ.1 கோடி தந்து விட வேண்டும் என்று கண்டிப்பான நிபந்தனை விதித்து நடித்து வருகிறாராம்.

அவர் நடிக்கும் படங்கள் 50, 60 நாட்களில் முடிந்து விடுகின்றன. அந்த நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்று கணக்கிட்டு தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்கியுள்ளனர்.

ஆனால் அக்‌ஷய்குமார் தற்போது நடித்து வரும் ‘ஜாலி எல்.எல்.பி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் அவர் 100 நாட்கள் நடிக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற காட்சிகள் அதிகம் இருப்பதால் படப்பிடிப்பு நாட்கள் நீள்கிறது என்கின்றனர். இந்த படத்தில் 100 நாட்கள் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 1 கோடி என்று கணக்கிட்டு அக்‌ஷய்குமாருக்கு ரூ.100 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்தனர்.

இதன்மூலம் இந்திபட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அக்‌ஷய்குமார் உயர்ந்து இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries