பட அதிபர் மதன் கேரள மாநிலத்தில் தலைமறைவா?: தனிப்படை தேடுதல் வேட்டை

201608200741295869_film-producer-madan-in-Kerala-police-searching_SECVPFபட அதிபர் மதன் காணாமல் போன வழக்கையும், அவர் மீதான மோசடி வழக்கையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே விஜயபாண்டி, டாக்டர் பார்கவன் பச்சமுத்து, சண்முகம், பாபு என்ற சீனிவாச பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள பட அதிபர் மதனை கண்டுபிடிக்கும்படி, சென்னை ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது.

இதன் பேரில் மதனை தேடி, கேரள மாநிலத்திற்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படையினர் விரைந்துள்ளனர். மதன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online