கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பு முடிவடைந்தது

201608211721240784_Kadavul-Irukkan-Kumaru-movie-shooting-wrapped_SECVPFஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் படமாக்கினர்.

தற்போது, இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் டப்பிங் பணியை தொடங்கவுள்ளனர்.

இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online