விஜய்யுடன் நடிப்பது என்னுடைய அதிர்ஷடம்: காமெடி நடிகர் சதீஷ்

201608211652556213_comedy-actor-sathish-about-act-to-vijay-films_SECVPFவிஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் அவருடன் காமெடி வேடத்தில் நடித்தவர் சதீஷ். தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘விஜய் 60’ படத்திலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் சதீஷ். இந்நிலையில், விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சதீஷ் கூறும்போது,

விஜய் சாரோட ‘கத்தி’ படத்திற்கு பிறகு தற்போது விஜய் 60 படத்திலும் சேர்ந்து நடித்து வருகிறேன். விஜய் சாருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருக்கிறது. அவருடன் நடிப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். என்னுடைய வாழ்க்கையில் அவருடைய படத்தில் நடிப்பது ஒரு மிகப்பெரிய விஷயம்.

‘கத்தி’ மாதிரியான ஒரு மிகப்பெரிய படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது, மறுபடியும் விஜய் சாரோட ‘விஜய் 60’-ல் நடிப்பது எல்லாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஒரு சக நடிகராக அவரைப் போல் பார்க்கவே முடியாது.

அந்தளவுக்கு நல்ல மனிதர். நம்மை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். நடிப்பதற்கு நிறைய ஆலோசனைகளும் சொல்வார். இப்பொழுது வரைக்கும் அவரை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

விஜய் சார் நிறைய படங்களில் நல்ல நல்ல காமெடி ரோல் எல்லாம் பண்ணியிருப்பார். ஒரு காமெடியான நான் அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries