மீண்டும் தள்ளிப்போகும் குற்றமே தண்டனை ரிலீஸ்

201608211418287847_Kutrame-Thandanai-release-date-postponed-again_SECVPFதேசிய விருது பெற்ற ‘காக்காமுட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘குற்றமே தண்டனை’. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் ‘காக்கா முட்டை’ படத்தைப் போலவே ரீலீசுக்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

இப்படம் பல்வேறு ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் வெளியிடுவதில் தாமதமாகிக் கொண்டே வந்தது. கடைசியாக ஆக.25-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர். இதற்கான காரணங்களை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. இளையராஜா இசைக்கும் இப்படத்தில் நாசர், ரகுமான், பூஜா தேவாரியா ஆகியோர் இதில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online