மகாபாரத நடிகர் சூர்யாவுக்கு வில்லன் ஆனார்

201608211211314219_Mahabharatham-Actor-villain-to-Suriya_SECVPFசூர்யா தற்போது ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் ‘எஸ்3’ என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கி, சென்னை மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களை பரிசீலித்து வந்தனர்.

இந்நிலையில், இந்தி சீரியல்களில் நடித்த தாகூர் அனூப் சிங் என்பவரை தற்போது இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். தாகூர் அனூப் சிங் மும்பையை சார்ந்த தொலைக்காட்சி நடிகர். இவர் நிறைய டிவி சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக, மகாபாரத சீரியலில் திருதராட்டிரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர்.

‘எஸ்3’ படத்தை ஹரி இயக்கி வருகிறார். இப்படத்தில் முந்தைய பாகங்களில் நடித்த ராதாரவி, அனுஷ்கா, நாசர் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர். கூடுதலாக இந்த பாகத்தில் ஸ்ருதிஹாசன், சூரி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries