நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது

201608212016431919_Actor-Kamal-Hassan-Chevalier-Award_SECVPFநடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் நடிகர் கமல்ஹாசனின் சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

களத்தூர் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் கலைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.

4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ள கமலஹாசனின் கலைத்திறனை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் வழங்கி கவுரவித்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries