வேலையில்லா பட்டதாரி கன்னட ரீமேக்கிலும் நடிக்கும் அமலாபால்?

201608221505542051_Amalapaul-act-to-kannada-VIP-remake_SECVPFதனுஷ்-அமலாபால் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘வேலையில்லா பட்டதாரி’. தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய ராக்லைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உரிமையை பெற்றது.

தற்போது இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் இப்படத்தை நந்தா கிஷோர் என்பவர் இயக்கவிருக்கிறார். மனோரஞ்சன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான நடிகை தேடும் சமீபகாலமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக அமலாபாலையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விரைவில் அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries