செவாலியர் விருது பெறும் கமலுக்கு திரையுலகினர் நேரில் வாழ்த்து

201608221459190708_Cinema-celebrities-wish-to-kamal_SECVPFபிரான்ஸ் அரசாங்கம் நடிகர் கமலுக்கு செவாலியர் விருது அறிவித்து கௌரவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு செவாலியர் விருது பெற்ற கமலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

திரையுலகத்தினர் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திரையுலகத்தினை சேர்ந்த சிலர் கமலை நேரில் சந்தித்து அவருக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் கமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும், நடிகர் சிவகுமார், பிரபு, சூர்யா, ராம்குமார், துஷ்யந்த், ஜெயராம் மகன் காளிதாஸ் மற்றும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது மனைவியுடன் கமலை நேரில் சந்தித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries