ரெமோ படத்தின் தலைப்பு மாற்றமா?

201608221333068252_Remo-movie-title-change_SECVPFசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெமோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

வருகிற அக்டோபர் 7-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் மாற்றவுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ‘ரெமோ’ என்ற தலைப்பு ஆங்கிலத்தில் அமைந்துள்ளதால், இப்படத்திற்காக தமிழக அரசு வழங்கும் கேளிக்கை வரி ரத்தாகும் என்ற அடிப்படையில் இப்படத்தை தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, படத்திற்கு ‘ரெங்கநாதன் என்கிற மோகனா’ என்ற தலைப்பு வைக்கப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால், படக்குழு தரப்பில் விசாரிக்கையில், படத்தின் தலைப்பை மாற்றப்போவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று குறிப்பிட்டுள்ளனர்.

படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் ‘ரெமோ’ என்று வருமாம். அதற்காகவே இந்த தலைப்பை வைத்திருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. எனவே, ‘ரெமோ’ படத்தின் தலைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online