மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு

201608221551223647_Fake-twitter-account-to-mottai-rajendran_SECVPFவில்லன் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி நடிப்பில் பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். ‘தெறி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை அடுத்து, தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களில் தீவிரமாக நடித்து வரும் ராஜேந்திரன் சமூக வலைத்தளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர்.

ஆனால், அவர் பெயரில் போலியான ஆசாமிகள் டுவிட்டர் கணக்கை (@Rajendran_offl) ஆரம்பித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

நாளுக்கு நாள் இந்த சர்ச்சை வளர்ந்ததை அடுத்து இன்று (22.8.16) காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார் ராஜேந்திரன்.

புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் சைபர் க்ரைம் மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்கள்.

ராஜேந்திரன் பெயர் கொண்ட டுவிட்டர் கணக்கை முடக்குவதுடன் மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளிலும் காவல் துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries