அஜித், விஜய்யை தொடர்ந்து சல்மான்கானுடன் இணையும் ஸ்ரீதேவி

201608231328209361_Sridevi-Kapoor-joint-with-salmankhan-again_SECVPF90-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு, படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தமிழ், இந்தியில் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் பதிப்பில் அஜித், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தில் அரசியாக நடித்து பெயர் பெற்றார். இதனால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் ஸ்ரீதேவி, அடுத்ததாக சல்மான்கானுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்.

அந்த படத்தில் ஸ்ரீதேவி, சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கவில்லை. அந்த படத்தை சல்மான்கான் தயாரிக்க மட்டுமே செய்கிறார். அம்மா-மகன் பாசத்தை சொல்லும் விதமாக அமையவுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாக நடிக்கவிருக்கிறார்.

மேலும், இப்படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல், பிற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் அறிவிக்கப்படவில்லை. விரைவில், அதுகுறித்த செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீதேவி ஏற்கெனவே சல்மான் கானுடன் ஒன்றிரண்டு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சல்மான்கானுடன் ஸ்ரீதேவி இணைந்து பணியாற்றப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries