கலைக்காக உள்ள அத்துணை விருதுகளையும் பெற தகுதியானவர் கமல்ஹாசன்: பார்த்திபன் புகழாரம்

201608231223079048_Actor-Parthiban-wish-to-Kamal-for-Chevalier-award_SECVPFநடிகர் கமலுக்கு பிரான்ஸ் அரசாங்கம் செவாலியர் விருது அறிவித்து கவுரவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக ‘செவாலியர்’ விருது பெற்ற கமல்ஹாசனுக்கு திரைத்துறை சேர்ந்த பலரும், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபனும் கமலுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறும்போது, “கமலுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியர் கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியரை வழங்கலாம்.

அவர் பேசும்போது கே.பாலச்சந்தர் சார் “அவன் எட்டாம் வகுப்புகூட முடிக்கவில்லை. ஆனா அவனுடைய ஆங்கிலத்தை புரிந்துக்கொள்ள எனக்கே ஒரு டிக்சனரி தேவைபடுது” என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது.

கலைக்காக உலகில் உள்ள அத்துணை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை கமல்ஹாசன் அவர்கள்! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுனர்வையும் கூட்டிக் கொடுக்கின்றன!”

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries