‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படைப்பு ‘கடைசி விவசாயி’

201608241532249238_Kakka-Muttai-director-next-movie-Kadaisi-Vivasayi_SECVPFதேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் தற்போது ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்படங்களை தொடர்ந்து தற்போது ‘கடைசி விவசாயி’ என்ற புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

70 வயது நிரம்பிய முதியவர்தான் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நபரை தற்போது படக்குழுவினர் தேடி வருகின்றனர். மேலும், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட முகங்களும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

சமுதாய அக்கறையோடு உருவாக இருக்கும் இப்படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் சேர்த்து உருவாக்க இருக்கிறார்களாம். எனவே, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடியதாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. நம்முடைய பசியை போக்க தங்களின் வியர்வையை சிந்தும் விவசாயிகளுக்கு ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை படக்குழுவினர் சமர்ப்பணமாக வைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வருடத்தின் இறுதியில் தொடங்க இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries