சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் ஆர்யா

201608241502243900_Arya-villain-to-Malayalam-super-star_SECVPFதமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வரும் ஆர்யா, பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவா இயக்கும் புதிய படத்தில் காட்டுவாசியாக நடிக்கவிருக்கும் ஆர்யா, இதற்கிடையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கவிருக்கும் ஒரு மலையாள படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கொடூரமான வில்லனாக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘தி கிரேட் பாதர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தை ஹனீப் அதேனி இயக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோயினாக சினேகா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரும் ஆர்யா, மற்ற மொழிகளில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஏற்கெனவே, கடந்த 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘வருடு’ என்ற படத்திலும் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online