மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷின் தொடரி?

201608241211352879_Dhanush-Thodari-release-again-postponed_SECVPFதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தொடரி’. பிரபுசாலமன் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் ரெயில்வே கேண்டீன் ஊழியராக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதியே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 2-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த தேதியிலும் படம் வெளியாகாது என தெரிகிறது.

ஏனென்றால், ‘தொடரி’ படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவது சந்தேகம் என கூறப்படுகிறது.

எனவே, படத்தை வரும் செப்டம்பர் 16-ந் தேதி வெளியிடப்படலாம் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online