நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல்: விருகம்பாக்கம் போலீசார் விசாரணை

201608250801066964_Actress-Radha-threatened-with-death-Virugambakkam-police_SECVPFசென்னை விருகம்பாக்கம், லோகய்யா காலனியில் வசித்து வருபவர் நடிகை ராதா. ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வைரம் என்பவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது ரவுடி வைரம் வேறொரு வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனவே செல்போனில் பேசியவர் வைரம் தானா? என்று விசாரித்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online