கேரள ஆஸ்பத்திரியில் நடிகை சரண்யாமோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

201608261208054259_baby-boy-for-actress-Saranya-Mohan_SECVPFகேரளாவை சேர்ந்தவர் நடிகை சரண்யாமோகன். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு கதாநாயகியாக உயர்ந்தவர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் சரண்யா மோகன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பிறகு அவர் ஏராளமான தமிழ் படங்களிலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்தார்.

‘யாரடி நீ மோகினி’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘வேலாயுதம்’, ‘அழகர்சாமியின் குதிரை’ போன்ற படங்கள் சரண்யாமோகனின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.

குடும்பபாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சரண்யாமோகன் கடந்த 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிக் கொண்ட சரண்யா மோகன் தனது கணவருடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரண்யாமோகன் கர்ப்பம் அடைந்தார்.

கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சரண்யா மோகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries