சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்

201608281347313503_Suriya-movie-director-married-next-week_SECVPFசூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘24’ படத்தை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் மாதவனை வைத்து ‘யாவரும் நலம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இவரும் ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்த ஸ்ரீநிதியும் காதலித்து வந்தனர். ‘24’ படம் ஆரம்பிக்கும்போது நண்பர்களாக இருந்த இவர்கள், அந்த படம் முடியும்போது காதலர்களாக மாறினர்.

இந்நிலையில், இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாரானார்கள். அதன்படி, இருவரது பெற்றோரும் இவர்களது காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, தற்போது திருமண தேதியை உறுதி செய்துள்ளார்கள். அதன்படி, வருகிற செப்டம்பர் 4-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம்குமார்-ஸ்ரீநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். அதன்பின்னர், திருமண வரவேற்பு தேதியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online