தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

201608281121529740_RJ-Balaji-acting-to-Telugu-Super-Star-Movie_SECVPFவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மோகன்ராஜா-சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமில்லாது, விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் ‘காத்துவாக்குலா ரெண்டு காதல்’ படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வழக்கம்போல் நாயகனின் நண்பனாக நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் ராகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லனாக நடிக்கவிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online