நடிகர் சங்கத்தை பற்றி குறைகூறுபவர்கள் ஆதாரமிருந்தால் நிரூபிக்கட்டும்: விஷால் அதிரடி

201608281244219264_Vishal-gives-a-furious-reply-to-the-protestors_SECVPFநடிகர் சங்கத்துக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு நாசர், விஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டினர்.

அடுத்து நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் புதிய படம் ஒன்றில் நடித்து அதில் கிடைக்கும் சம்பள தொகை முழுவதையும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர். ஓரிரு மாதத்தில் கட்டுமான பணிகளை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகளை கண்டித்து துணை நடிகர், நடிகைகள் சிலர் நேற்று தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலகம் முன்னால் நேற்று காலை திரண்டனர்.

நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டபடியே அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க உறுப்பினரான வாராகி, நடிகர் சங்க நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை. நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிதி வசூலில் முறைகேடு நடந்துள்ளது. கட்டிடம் கட்டும் பணியிலும் டெண்டர் விடாமல் கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். இதை எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

வாராகியின் இந்த குற்றச்சாட்டுக்கு விஷால் பதிலளிக்கும்விதமாக கூறும்போது, நடிகர் சங்கத்தை பற்றி குறை கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும். பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம்.

வாராகியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம், அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

நாங்கள் இன்னும் டெண்டரை விடவில்லை. எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏவிடம் இருந்து அனுமதி வரவில்லை. வாராகி சொல்வதில் உண்மை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த கடிதமும் எனக்கு வரவில்லை, நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries