சிவாஜி பட தலைப்பை கைப்பற்றிய விஷால்?

201608301242399447_Vishal-to-get-sivaji-movie-title_SECVPFவிஷால் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளது. தற்போது ‘கத்திசண்டை’ படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’, திரு இயக்கத்தில் புதிய படம் என வரிசையாக படங்கள் உள்ளன.

இந்நிலையில், பி.எஸ்.மித்ரன் என்ற அறிமுக இயக்குனரின் படத்திலும் நடிக்க விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாகவே தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு பழம்பெறும் நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘இரும்பு திரை’ என்ற படத்தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

1960-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இரும்பு திரை’ படத்தில் சிவாஜி, சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெமினி நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries