விஜய் படத்தில் நடிப்பது பிரமிப்பாக இருக்கிறது: அபர்ணா விநோத்

201608311621044515_Exciting-to-acting-to-Vijay-actress-aparna-vinod_SECVPFவிஜய் நடித்து வரும் 60-வது படத்தில் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக நடிப்பவர் அபர்ணா விநோத். மலையாள நடிகையான இவர், விஜய் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அப்பா-அம்மாவாக மலையாள நடிகர் விஜயராகவன், மலையாள நடிகை சீமா ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேசும் மலையாள வரவு.

விஜய் படத்தில் நடிக்கும் அனுபவம் பற்றி அபர்ணா விநோத்திடம் கேட்டபோது… “என்னுடன் நடிக்கும் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் மலையாள திரை உலகில் இருக்கும் உணர்வுதான் இருக்கிறது. தமிழ் படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை.என்றாலும், விஜய் படத்தில் நான் நடிக்கிறேன் என்ற பிரமிப்பு இருக்கிறது.

இதுவரை விஜய்யுடன் நடிக்கும் காட்சியை படமாக்கவில்லை. இனிமேல் தான் அவருடன் நான் நடிக்கும் காட்சிகள் படமாக இருக்கின்றன. விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

விஜய் படத்தில் நடிக்கும் சூட்டிங் தளத்திலேயே அபர்ணா தமிழ் கற்று வருகிறார். விரைவில் சரளமாக தமிழ் பேச முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறுகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries