மீண்டும் கூட்டணி அமைக்கும் மாதவன், ஆர்யா, அமலாபால்

201608311244109247_Madhavan-Arya-Amalapaul-again-joint_SECVPFமாதவன், ஆர்யா, அமலாபால் மூன்று பேரும் சேர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘வேட்டை’ படத்தில் நடித்திருந்தனர். தற்போது மூன்று பேரும் மறுபடியும் கூட்டணி அமைத்துள்ளனர். சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடைபெறவிருக்கும் ‘நட்சத்திர பேட்மிண்டன்’ போட்டிக்காக மூன்று பேர் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து தற்போது நட்சத்திர பேட்மிண்டன் போட்டி விரைவில் நடைபெறவிருக்கிறது. ‘செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்’ என்ற பெயரில் நடக்கவிருக்கும் இந்த போட்டிகள் சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடைபெறவிருக்கிறது. இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.

இதில், சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த அணியில் நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடுகிறார்கள்.

இந்த அணியின் விளம்பர தூதராக மாதவன் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அணியின் ஊக்குவிப்பாளராக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries