சிவகார்த்திகேயன் படத்தில் சினேகா

201608311212217989_Sneha-board-in-Sivakarthikeyan-movie_SECVPFசிவகார்த்தியேன் நடிப்பில் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து மோகன்ராஜா இயக்கும் புதுப்படம் ஒன்றிலும், பொன்ராம் இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களையும் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இதில், மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும், தற்போது சினேகா மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

பிரசன்னாவுடனான திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த சினேகா, கர்ப்பமான பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

அவருக்கு குழந்தை பிறந்து 1 வருடம் ஆன நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் படம் மட்டுமின்றி, மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் சினேகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries