அதுதான் அஜித்; அதுதான் தல: உணர்ச்சி பொங்க பாராட்டிய விஜயகுமார்

201609011610111777_Thats-Ajith-Thats-Thala-actor-vijayakumar_SECVPFஅருண் விஜய் நடிப்பில் புதிதாக உருவாகியிருக்கும் படம் ‘குற்றம் 23’. இப்படத்தை ‘ஈரம்’, ‘வல்லினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். மகிமா நம்பியார், அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நடிகர் விஜயகுமாரும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

‘குற்றம் 23’ படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர்கள் கவுதம் மேனன், சசி, எஸ்.பி.ஜனநாதன், நடிகர் ஜெயம் ரவி, விஜயகுமார், பரத், ஸ்ரீகாந்த், ரியாஸ்கான், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது விழாவில் நடிகர் விஜயகுமார் பேசும்போது, விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு, இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆரம்பித்தார்.

அவர் பேசும்போது, அருண் விஜய் நடித்த படங்களில் சில வெற்றி பெற்றது. சில படங்கள் சுமாராக ஓடியது. அப்படியிருந்த போது, அவரை அழைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க வைத்து அவரை இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு உருவாக்கியதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் நானும், எனது மகனும் மறக்கமாட்டோம்.

அருண்விஜய் மேல் நம்பிக்கை வைத்து அஜித்தும் என்னை அறிந்தால் படத்திற்கு ஓகே சொன்னார். அதனால், அஜித்துக்கும் நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். சக நடிகனின் வளர்ச்சியை கண்டு மற்ற நடிகர் சந்தோஷப்படவேண்டும். அதுதான் அஜித், அதுதான் தல. அவருக்கும் என்னுடைய நன்றிகள் என்று பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online