விஜய், அஜித்துடன் மகேஷ்பாபுவை மோதவிடும் ஏ.ஆர்.முருகதாஸ்

201609011527443277_AR-Murugadoss-clash-with-vijay-and-ajith_SECVPF‘கத்தி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் நாயகியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாவதால் இரு மொழிகளுக்கும் நன்கு பரிச்சயமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் அவர்களின் சொந்த குரலிலேயே டப்பிங் பேசவுள்ளது இப்படத்தின் சிறப்பு.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னை ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் மிகப்பெரிய அரங்குகளை நிர்மாணித்துள்ளனர். இங்கு தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்கெனவே விஜய் நடித்த ‘தெறி’, ‘விஜய் 60’, ரஜினி நடிக்கும் ‘2.ஓ’ ஆகிய படங்கள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் தீபாவளிக்கு படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தேதியில்தான் ‘விஜய் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும், அஜித் நடித்துவரும் ‘தல 57’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online