சிவாஜி வீட்டு சாப்பாட்டுக்காக ஏங்கிய ரோபோ சங்கர்

201609011236033826_Robo-Shankar-craved-for-Sivaji-home-food_SECVPFதமிழ் சினிமாவில் சிவாஜி வீட்டு சாப்பாடு என்றால் அதற்கு தனி ருசியும், மரியாதையும் உண்டு. சமீபத்தில்கூட நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு, சிவாஜி வீட்டில் தடபுடலாக விருந்து நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

அதுமட்டுமில்லாமல், சிவாஜி வீட்டைச் சேர்ந்த பிரபு, விக்ரம் பிரபு நடிக்கும் படங்களில் எல்லாம் அந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கு சிவாஜி வீட்டில் இருந்து ஸ்பெஷலாக சாப்பாடு படப்பிடிப்பு தளத்துக்கே வருமாம்.

அப்படித்தான், தற்போது விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘வீரசிவாஜி’ படத்தின் படப்பிடிப்பின் போதும் சிவாஜி வீட்டிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டு படக்குழுவினருக்கு பரிமாறப்பட்டதாம்.

நெடுநாட்களாக சிவாஜி வீட்டு சாப்பாட்டை ருசித்து பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த ரோபோ சங்கர், இந்த படத்தில் விக்ரம் பிரபுவிடம் சேர்ந்து நடித்திருப்பதால், அந்த ஆவல் நிறைவேறிவிடும் என்று நினைத்திருந்தார். ஆனால், படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவாஜி வீட்டு சாப்பாட்டை படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின்போதுதான் அவரால் சாப்பிட முடிந்ததாம்.

ஒவ்வொரு நாளும் இவர் சாப்பிடலாம் என்று நினைத்து வரும்போதெல்லாம் படக்குழுவில் உள்ள அனைவரும் அந்த சாப்பாட்டை தின்று தீர்த்துவிடுவார்களாம். இதனால், இவருக்கு வெறும் சட்டி, பானை மட்டுமே மிச்சமாக இருந்துள்ளது.

கடைசி நாளில் எப்படியோ சிவாஜி வீட்டு சாப்பாடு கிடைத்த சந்தோஷத்தில் அதை ருசித்து சாப்பிட்ட ரோபோ சங்கர், தனது வீட்டுக்கும் அதை எடுத்து சென்று தனது மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries