மாணவிகள் முன் ஆபாச நடனம் ஆடியதாக புகார்: கும்கி பட நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது

201609021000143569_Actor-Sreejith-Ravi-in-custody-over-flashing-incident_SECVPFஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பத்திரிபாலத்தில் அரசு பள்ளி உள்ளது. சம்பவத்தன்று, இந்த பள்ளியின் முன் மாலை 4 மணிக்கு சொகுசு கார் ஒன்று வந்து நின்றது.

அப்போது பள்ளி முடிந்து அந்த வழியாக மாணவிகள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். காருக்குள் இருந்து இறங்கிய ஒரு நபர் சாலையில் நடந்து சென்ற மாணவிகளை தனது செல்போனில் படம் எடுத்ததாக தெரிகிறது.

பின்னர் அவர் திடீரென்று மாணவிகள் முன் ஆபாச நடனம் ஆடியதாக தெரிகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். உடனே அந்த நபர் தனது காரில் ஏறி வேகமாக தப்பிச்சென்று விட்டார்.

இதற்கிடையில் சில மாணவிகள் கார் எண்ணை குறித்து வைத்திருந்தனர். அவர்கள் அது பற்றி தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒத்தப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மாணவிகள் முன் ஆபாச நடனமாடியது பிரபல நடிகர் ஸ்ரீஜித்ரவி என்பது தெரியவந்தது. இவர் மலையாளம், தமிழில் கும்கி சினிமா உள்பட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீஜித் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்ட கார் என்னுடையது தான். அன்று நான் பத்திரிபாலத்தில் நடந்த படப்பிடிப்புக்காக சென்றேன். ஆனால் காரில் வந்து நிர்வாண நடனமாடியது யார்? என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர்கள் நேற்றுமுன்தினம் பாலக்காடு மாவட்ட கலெக்டர் மேரிக்குட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோரிடம், மாணவிகள் முன் நடிகர் ஆபாச நடனம் ஆடியது தொடர்பாக புகார் கொடுத்தனர். அத்துடன் நடனமாடியது நடிகர் தான் என்பதற்கான ஆதாரங்களையும் அளித்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதன் பேரில் நடிகர் ஸ்ரீஜித் ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க ஒத்தப்பாலம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஒத்தப்பாலம் போலீசார் விரைந்து செயல்பட்டு நேற்று மாலை நடிகர் ஸ்ரீஜித்ரவியை கைது செய்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries