திகில் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது: ஜெயம்ரவி

201609020907181575_fans-are-welcome-to-Horror-movies-Jayam-Ravi_SECVPFஅருண்விஜய்-மகிமா ஜோடியாக நடித்துள்ள படம், ‘குற்றம் 23.’ அறிவழகன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-

“அருண் விஜய் எல்லா தகுதிகளும் உள்ள கதாநாயகன். மற்ற நடிகர்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார். எனக்கு விஜய் மற்றும் அருண் விஜய் நடனங்கள் மிகவும் பிடிக்கும்.

சிலர் தங்களுடைய படங்கள் நன்றாக ஓடாதபோதும், மனம் தளராமல் நாம்தான் சினிமா… நம்மால் முடியாவிட்டால் யார் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு உழைத்து ஜெயித்தும் இருக்கிறார்கள். அந்த நடிகர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.

கவுதம் மேனன் பார்வை அருண்விஜய் மீது பட்டு அதன்மூலம் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்போது ஈரம் படம் மூலம் பிரபலமான அறிவழகன் இயக்கத்தில் குற்றம் 23 படத்தில் நடித்து இருக்கிறார்.

கிரைம், திகில் படமாக இது தயாராகி உள்ளது. திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள் நன்றாக ஓடி வசூல் குவிக்கின்றன. எனவே இந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும்.”

இவ்வாறு ஜெயம்ரவி பேசினார்.

டைரக்டர் ஜனநாதன் பேசும்போது, “சினிமாவுக்கு தனியாக வங்கி வேண்டும். ரூ.500 கோடி இருந்தாலே வங்கி தொடங்கி விடலாம். இதன்மூலம் கடன் பெறமுடியும். ரிசர்வ் வங்கியிடம் இருந்தும் நிதி பெறமுடியும்” என்றார்.

நடிகர்கள் அருண்விஜய், விஜயகுமார், ஸ்ரீகாந்த், பரத், உதயா, ரியாஸ்கான், ஹேமச்சந்திரன், நடிகை சுஜாவாருணி, டைரக்டர்கள் கவுதம் மேனன், மகிழ் திருமேனி, தயாரிப்பாளர் இந்தர்ஜித், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online