தமிழ் தெரியாத கதாநாயகிகளால் சிறப்பாக நடிக்க முடியாது: விக்ரம் பிரபு

201609020833546738_Tamil-unknown-heroines-cannot-act-better-Vikram-Prabhu_SECVPFவிக்ரம் பிரபு-ஷாம்லி ஜோடியாக நடித்துள்ள படம், ‘வீர சிவாஜி.’ ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை கணேஷ் விநாயக் டைரக்டு செய்துள்ளார்.

வீர சிவாஜி படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் கதாநாயகன் விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் இமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் விக்ரம் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“வீர சிவாஜி ஜனரஞ்சகமான படமாக தயாராகி உள்ளது. ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெறும் வீரமான இளைஞனை பற்றிய கதை. இதில் நான் டாக்சி டிரைவராக வருகிறேன். கள்ள நோட்டு விஷயங்கள் மற்றும் அன்றாடம் ஒரு டிரைவரை சுற்றி நடக்கும் சம்பவங்கள் படத்தில் இருக்கும். அதிரடி, நகைச்சுவையுடன் ஜாலியான படமாக வந்துள்ளது.

காட்சிகள் விறுவிறுப்பாக நகரும். இமான் சிறந்த பாடல்களை கொடுத்து இருக்கிறார். ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஷாம்லி கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் பேச தெரிந்த கதாநாயகிகளுடன் நடிப்பது சவுகரியமானது. தமிழில் கொடுக்கும் வசனத்தை புரிந்து கொண்டு பேசுபவர்களாக கதாநாயகிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நடிகைகளால்தான் கதையை உள்வாங்கி சிறப்பாக நடிக்க முடியும்.

தமிழ் பேச தெரியாத நடிகைகள் எழுதி கொடுத்த வசனத்தை எப்படி பேசுவது என்பதில்தான் கவனமாக இருப்பார்கள். சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு சிந்தனை இருக்காது. ஷாம்லி தமிழ் பேசக்கூடியவர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாகி இருக்கிறார். எனவே அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். அதிரடி படங்கள் மட்டுமன்றி எல்லா கதையம்சம் உள்ள படங்களிலும் நடிப்பேன்.”

இவ்வாறு விக்ரம் பிரபு கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries