மிரட்டும் இருட்டு – திரை விமர்சனம்

maxresdefaultதிருடுவதையே தொழிலாக கொண்ட டேனியல், டைலன், ஜானே லெவி மூன்று பேரும் ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத ஒரு ஏரியாவில் தங்கியிருக்கும் கண் தெரியாதவரின் வீட்டில் திருடச் செல்கிறார்கள். அந்த வீட்டுக்குள் நுழையும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு அந்த வீட்டுக்குள் என்ன நடந்தது? அவர்களை மிரட்டும் சக்தி எது? அவர்கள் திட்டமிட்டபடி கொள்ளையடித்து திரும்பினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

கண் தெரியாதவராக நடித்திருக்கும் ஸ்டீபன் லாங் தான் இப்படத்தின் மிகப்பெரிய பலமே. அவருடைய முரட்டுத்தனமான உடம்பு, மிரட்டும் கண் என பார்ப்பவர்களை ரொம்பவுமே பயமுறுத்துகிறார்.

கண் தெரியாதவராக இருந்தாலும், அந்த வீட்டுக்குள் ஒவ்வொரு இடத்தையும் அவ்வளவு வேகத்தில் கடக்கும்போது நம்மையே வியக்க வைக்கிறார். கடைசி காட்சிகளில் அவரது நியாயமான கோரிக்கை நம்மையும் கண்கலங்க வைக்கிறது.

படத்தில் இவர் ஒருபக்கம் மிரட்டியிருக்கும் பட்சத்தில், மறுபக்கம் இவர் வளர்க்கும் முரட்டுத்தனமான நாயும் நம்மையும் மிரட்டுகிறது. நண்பர்களாக வரும் டேனியல், டைலன், ஜானே லெவி மூன்றுபேரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் கதை முழுக்க ஒரே வீட்டுக்குள் நடந்தாலும், காட்சிக்கு காட்சி திகில் வைத்து பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் பீடே ஆல்வரிஷ்.

கண் தெரியாத ஒருவரின் நடவடிக்கைகளை இவ்வளவு அழகாகவும், மிரட்டும் விதமாக செய்திருப்பது சிறப்பு. அந்த வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அழகாக யோசனை செய்து அற்புதமாக படமாக்கியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும், அடுத்தது என்ன நடக்கும் என்பதுபோன்ற திகில் காட்சிகளே படத்தில் அதிகம். திரில்லரை எதிர்பார்த்து செல்கிறவர்களுக்கு இப்படம் கண்டிப்பாக புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மட்டும் உறுதி.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ரோக் பனோசின் பின்னணி இசை. காட்சியின் தேவைக்கேற்றபடி பின்னணி இசையை கொடுத்து, அசத்தலான திரில்லிங்கை கொடுத்திருக்கிறார்.

பெட்ரோ லூக்கின் ஒளிப்பதிவில் வீட்டுக்குள் வேகமாக நகரும் காட்சிகள் எல்லாம் கதையோட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மிரட்டும் இருட்டு’ மிரட்டல்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries