ஜெயம்ரவி -ஏ.எல்.விஜய் படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தியில் ஆரம்பம்

201609031718541198_jayam-ravi-next-movie-starts-vinayagar-chaturthi_SECVPF‘தேவி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கும் ஏ.எல்.விஜய் இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜெயம்ரவி-ஏ.எல்.விஜய் இருவரும் இணைகின்றனர்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற விநாயகர் சதுர்த்தியில் தொடங்குகிறது.

இப்படம் குறித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் கூறுகையில் “ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பது தான் சிறப்பு. ‘கிரீடம்’ படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திரு சாருடன் மீண்டும் இந்த படத்திற்காக இணைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.

யதார்த்தமான காட்சிகளை அற்புதமாக உருவாக்கும் திறமை படைத்த ஒரு கலைஞர் திரு சார். ஜெயம் ரவியை ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உடன் பிறவா சகோதரராகவும் தான் நான் பார்க்கிறேன். அவரோடு இணைந்து பணி புரிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.எனது ஆசை இந்த படத்தின் மூலம் இரட்டிப்பாகி உள்ளது” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries