‘லொள்ளுசபா’ புகழ் ஜீவா டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

201609031525577278_vijay-sethupathi-release-aaramabame-attagasam-teaser_SECVPF‘லொள்ளுசபா’ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. படத்தின் முதல் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார். இது பற்றி கூறிய அவர். “ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் இயக்குனர் ரங்கா உதவி இயக்குனராக இருக்கும் போதே தெரியும் அவர் வெற்றி பெற வேண்டும்.

நாயகன் ஜீவாவின் படத்தின் தலைப்பை போலவே, படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.சுவாதி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தி தினத்தில் விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.

தர்மதுரையைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘றெக்க’ திரைப்படம் வெளியாகவுள்ளது. ‘ஆண்டவன் கட்டளை’, ‘வட சென்னை’ என அரைடஜன் படங்களில் விஜய் சேதுபதி பிசியாக நடித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries